ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாக கடைபிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை ( tn ration shops ) எடுக்கப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் .
Also Read : புனே விபத்து வழக்கு – சிறுவனுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஜாமின் ரத்து..!!
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும்
ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாக கடைபிடிக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்றும் , நேரத்திற்கு கடைகள் திறக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் கொடுத்துவந்த நிலையில் ( tn ration shops ) தற்போது தமிழ்நாடு கூட்டுறவுத்துறை எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.