நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது 14 வருட இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு கூட்டாக அறிவித்தனர்.
இதையடுத்து ரஜினிகாந்த் உள்பட பலர் இருவரிடமும் பேசி சமரசம் செய்து வைக்க முயன்ற நிலையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததால் சட்டப்படி விவாகரத்து பெற இருவரும் நீதிமன்றத்தை நாடினர்.
Also Read : சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!!
இந்நிலையில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இன்று இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இருவரிடம் சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி விசாரணை நடத்தினார் அப்போது எங்களின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை நாங்கள் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி சுபா தேவி தெரிவித்துள்ளார்.
திரையில் நாம் பார்த்து ரசித்த பலர் அடுத்தடுத்து தங்களது விவாகரத்து குறித்த செய்தியை வெளியிட்டு வருவது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.