சென்னையில் நேற்று காலை டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் மிகவும் மோசமாக இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பகீர் கிளப்பும் தகவலை கொடுத்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பெயரையும் புகழையும் பெற்ற இவர் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த நடிகர் மாரிமுத்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற சூப்பர் ஹிட் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் அவரது முகம் தெரிந்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்நிலையில் நேற்று காலை டப்பிங் பணியின் போது தீடிர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து நேற்று காலை 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகர் மாரிமுத்துவின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் பகீர் கிளப்பும் தகவலை தெரிவித்துள்ளார்.
நேற்று காலை டப்பிங் பணிக்கு சென்ற மாரிமுத்துவுக்கு உடம்பில் ஏதோ அசோகரிகம் இருந்ததை தெரிந்துகொடு டப்பிங் பணியினை பாதியில் நிறுத்திக்கொண்டு அவரே கார் ஓட்டி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்றவுடன் கோமா நிலைக்கு சென்ற மாரிமுத்துவுக்கு BP மற்றும் PULSE ரேட் மிகப்பும் குறைந்து காணப்பட்டது நாங்கள் நீண்ட நேரம் போராடியும் அவரை சீரான நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.
ஒருகட்டத்தில் அவரது வாயில் இருந்து நிறைய நுரை வெளியே வர ஆரம்பித்துவிட்டது அவரது மருத்துவ ரிபோர்டுகளை பார்த்தபோது அவர் ஏற்னகவே இதய நோயாளி என்பது தெரியவந்தது . அவருக்கு இருமுறை ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. அவரின் கடைசி சில நிமிடங்கள் மிகவும் மோசமாக இருந்தது என நடிகர் மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.