நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. இன்று செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மாபுப் பாஷா காலமானார்.
செங்கல்பட்டில் நகைகளைப் பாலிஷ் செய்யும் தொழில் செய்து வந்த நாசரின் தந்தை மெகபூப்மாபுப் பாஷா, தனது மகன் நாசரை நடிகராக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார்.
இதனால், தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற நினைத்த நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக கொஞ்சமும் விருப்பமில்லாமல் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார் நாசர்.
அதன் பின்னர், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், தாஜ் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார்.
தனது மகன் சப்ளையராக வேலை பார்ப்பது பிடிக்காத நாசரின் தந்தை அவரைக் கண்டித்து திட்டி, மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடி முயற்சிக்க சொன்னார்.
இந்நிலையில், சினிமாவை பலமுறை வேண்டாமென தவிர்த்துவிட்டுச் சென்ற நாசரின் நடிப்பு பின்னாளில் திரைத்துறையில் தனிப்பெரும் அடையாளமானது.
நகைகளை பாலீஷ் செய்யும் தொழில் செய்து வந்த ஏழைத் தந்தையின் கனவு, தன் மகன் நாசரை இந்திய சினிமாவின் மதிப்பிற்குரிய நடிப்பின் அடையாளமாக உயர வைத்தது.
இந்நிலையில், இன்று மாபுப் பாஷா உடல்நலக் குறைவால் அவரது இல்லத்தில் காலமானார்.