தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.
Also Read : ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்போர் மீது FIR பதிவு..!!
இதையடுத்து போலீசார் கஸ்தூரியை கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தார் . பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கூறிய கஸ்தூரி முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கஸ்தூரியின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி காட்டமான கருத்துக்களை சொல்லி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.