மயோடிசிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சமந்தாவிற்கு தொழில் ரீதியிலான வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அப்படி அமையவில்லை.
தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமான நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் நதியாகி சமந்தாவுக்கும் 2017 நடைபெற்ற திருமணம் கருத்து வேறுபாட்டால் 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
விவாகரத்து பெற்ற சமந்த சினிமாவில் முழுமையாக தனது நடிப்பை தொடங்கிய நிலையில் மயோடிசிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக போராடி வருகிறார். இதனால் விஜய் தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்து வந்த குஷி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் சிகிச்சைகளுக்கு பிறகு கம் பேக் கொடுத்த சமந்தா படப்பிடிப்பை தொடங்கினார். மேலும் வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார்.
இதனைத் தொடர்ந்து உடல்நிலை காரணமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகப்போவதாக சமந்தா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றிய குறிப்புகளையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த சிகிச்சையின் மூலம் வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது என குறிப்பிட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்றும் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது என பகிர்நது கொண்டுள்ளார்.