கோவை – பொள்ளாச்சி – கோவை இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில், வரும் 25ம் தேதி முதல் தினசரியும் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் பழனி, மதுரைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 25ம் தேதி முதல் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயிலானது 25ம் தேதி முதல் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை காலை 6.30 மணிக்கு சென்றடையும்.பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கும் காலை 8.45 மணிக்கு வந்தடையும்.
காலை 6.30 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் ரயிலில் செல்லும் பயணிகள், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு காலை 6.50 மணிக்கு வந்தடையும்.