ஆப்கானிஸ்தானில் (Afghanistan) துணிக்கடைகளில் பெண் பொம்மைகளின் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் (Afghanistan), முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க அரசால் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தலிபான்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்குகான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், இப்போது, துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில் முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் ஆப்கனில் உள்ள ஜவுளிக்கடைகளில் போஸ் கொடுக்கும் பெண் பொம்மைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காட்சி அளிக்கின்றன.
மேலும், தற்போது ஆப்கானிஸ்தான் கடைகளில் பெண் பொம்மைகள் முகம் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.