சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர .
சென்னையில் பெரும்புள்ளிகள் , மற்றும் தொழிலதிபர்கள் அதிகம் இருக்கும் தி.நகர், கோபாலபுரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜவுளி நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு, அவரது நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்ற்னர் . இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் இரு மாநிலங்களை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.