அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி: இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை
ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள். மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், நாளை 21.11.2023 செல்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.