அதிமுக தற்போது சரியாக இல்லை என்றும் கட்சியில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது :
அதிமுக தற்போது சரியாக இல்லை. அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்தி 2026ம் மக்களாட்சி அமைக்கப் போகிறோம்.சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தை பிரித்துள்ளார்கள்.
அம்மா ஆட்சிக்காலத்தில் கோடை நாட்களிலேயே சென்னையில் உள்ள 3 கூவம் ஆறுகளையும் தூர்வாரி விடுவோம். ஆனால் அம்மா செய்ததை திமுக-வினர் செய்யவில்லை. . ஆட்சிக்கு வந்த திமுக அரசு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதே தவிர, மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க தவறிவிட்டது. வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.