அபுதாபியில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் தீப்பிடித்த (plane caught fire) சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் இருந்து காலிகட் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இன்று அதன் இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து, அபுதாபி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று டிஜிசிஏவை மேற்கோள் காட்டி ஏஎன்/ தெரிவித்துள்ளது.
“இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் VT- AYC இயக்க விமானம் IX 348 (அபுதாபி- காலிகட்) ஏறும் போது 1000 அடியில் எண்.1 இன்ஜின் ஃப்ளேம்அவுட் காரணமாக ஏர்டர்ன்பேக்கில் ஈடுபட்டுள்ளது” என்று விமான ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்இந்த சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும், இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் விமானச் செயல்பாட்டின் போது 546 தொழில்நுட்பக் கோளாறுகள் (plane caught fire) ஏற்பட்டதாக ஏர்லைன்ஸ் அறிக்கையிலும், இண்டிகோ ஏர்லைன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.