டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்று மாசுவால் மக்களின் ஆயுட்காலம் குறைவதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய இந்திய தாய் நாட்டின் தலைநகரமாக விளங்கும் டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசுபாட்டின் அளவால், அங்கு வசிப்பவர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 8.5 வருடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காற்றின் தரக் குறியீடு 2024 அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : தனியார் பள்ளிக்கே Tough கொடுக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி..!!
ஏற்கனவே அதீத காற்று மாசால், டெல்லி வாசிகள் 1.8 கோடி பேர் தங்கள் சராசரி ஆயுட்காலத்தில் 12 வருடங்களை இழந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்ற நிலையில், வருங்காலங்களில் இந்நிலை மிகவும் மோசமடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் நாட்டின் உச்சியில் ஒய்யாரமாக டெல்லி இடம்பெற்றிருந்தாலும் காற்று மாசுபாட்டால் நாட்டின் டெல்லி வருந்தத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடும் குளிர் , காற்று மாசு , போக்குவரத்து நெரிசல் என அங்கு ஏராளமான இன்னல்கள் இருந்து வரும் நிலையில் டெல்லி வாசிகளின் ஆயுள் காக்க மத்திய அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.