உலகளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட போட்டியானது WWE எனப்படும் மல்யுத்த போட்டி. இந்த போட்டிகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் நடைப்பெற்று வருகின்றன. இந்த மல்யுத்த போட்டிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுப்போக்கு அம்சமாகும். இந்த போட்டியை பார்க்கவே சில ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்யக்கூடிய ரசிகர்கள், பொது மக்கள் அமெரிக்காவிலுள்ளனர்.
இந்த மல்யுத்த போட்டியின் மூலம் உலக புகழ் பெற்ற வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஜான் சீனா, மம்மி பட வில்லனான தி ராக், மற்றும் மல்யுத்த கள ஜாம்பவான் தி அன்டர்டெக்கர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் தனித்துவமான ஆட்ட திறன், செயல்கள் மூலம் பிரபலம் அடைந்தனர். இதே போல் இந்த மல்யுத்த களத்தில் வித்தியாசமான செயல் மூலம் வீரர்கள் மக்களை கவருவர். அதே போன்ற நிகழ்வு ஒன்று தான் தற்போது அரங்கேறியுள்ளது.
ஆஸ்டின் தியரி எனும் மல்யுத்த வீரர் ஒருவர் சமீபகாலத்துக்கு முன்பு தான் மல்யுத்த போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார். மல்யுத்த களத்தில் தி பீஸ்ட் என்று அழைக்கப்படும் மலயூத்த போட்டியின் மன்னனான பிராக் லேஸ்னரோடும் போட்டியிட்டுள்ளார். இவரிடம் வித்தியாசமான செயல் ஒன்று உள்ளது,எந்த போட்டியில் தான் பங்கு பெற்றாலும் அந்த போட்டியின் அரம்பத்திலோ அல்லது போட்டியில் எதிரியை வீழ்த்திய பின்போ அந்த நிகழ்வை தனது கைப்பேசியில் செல்ஃபி எடுத்துக்கொள்வது அவரது வழக்கம்.
ஆனால் தற்போது அவர் பங்குப்பெற்ற போட்டியோன்றில் அவரை எதிர்த்து ஆடிய வீரர்கள் அவரை தாக்கும் நிகழ்வை படம்பிடித்துள்ளனர். பாபி லாஸ்லே மற்றும் ஏ ஜே ஸ்டைல்ஸ் உடனான போட்டியோன்றில் பாபி லாஸ்லே அவரை தூக்கி வீச முற்படும்போது அதனை ஏ ஜே ஸ்டைல்ஸ் தியரி கைபேசியில் செல்ஃபி எடுத்துள்ளார். தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் பிரபலமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு நடந்த போட்டியோன்றில் பராக் லெஸ்னரும் அவரை தாக்கி அவரோடே செல்பி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.