அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதி நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா ஊரடங்கு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 150 பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வரும் ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அலங்காநல்லூரில் 16 ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதி நடைபேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.