பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியாக வலம் ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடி முதல் முறை தங்களது மகளை உலகிற்கு காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடி திரையுலகில் பல படங்களில் ஒன்றாக நடித்து வந்த இவர்கள் நெடு நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் 14 April 2022 அன்று பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ராஹா கபூர் என பெயரிட்டு இருக்கின்றனர். ரன்பீர் மற்றும் ஆலியா பட் ஜோடி கடந்த சில நாட்களாகவே தங்களது மகள் போட்டோவை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின் மகள் ராஹா உடன் ரன்பீர் மற்றும் ஆலியா போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .