பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (amithsha) தமிழகம் வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் மக்கள் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரபடுத்தி உள்ளனர்.
இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கட்சியில் இருக்கும் திரை பிரபலங்கள் ,பிரபல அரசியல் தலைவர்கள் என அனைவரும் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் 12, 13ஆம் தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்.12ஆம் தேதி சிவகங்கை, மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் அமித்ஷா; ஏப்.13ஆம் தேதி குமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார் .
இதையடுத்து அன்று அன்று மாலை நாகை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா அங்கிருந்து (amithsha) தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலின் முடிவில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.