எண்ணூர் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு (Ammonia leakage) வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலின் போது CPCL நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பல கடுமையான பாதிப்பை சந்தித்தனர் .
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் அமோனியம் வாயு வெளியேறியது .
அமோனியம் வாயு கசிவு (Ammonia leakage) சற்று அதிகமாக இருந்ததால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர் .
இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன
இந்நிலையில் எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது .
இதனை கண்டித்து அந்த தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போரட்டம் நடத்தினர்.
இதையடுத்து மறுஅறிவிப்பு வரும் வரை அந்த தொழிற்சாலையை மூடி வைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு தொழிற்சாலையும் மூடப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆணைப்படி, உரிய சோதனைகளை மேற்கொண்டபிறகே, ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோரமண்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இழப்பீடு தொகை தொடர்பாக ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read :https://itamiltv.com/dmdk-protest-against-dmk/
இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழு ஓரிரு நாட்களில் தமிழக அரசிடம் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது .
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.