ஒமிக்ரான் வகை கொரோனாவின் உருமாற்றம் அடைந்த BA.2.86 மாறுபாட்டின் முதல் பாதிப்பை உறுதி செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. கொரோனா கொ வைரசை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உருமாற்றங்கள் அடைந்து வருகிறது.
அந்த வகையில் ஒமிக்ரான் வகை கொரோனாவின் அதிகமுறை உருமாற்றம் அடைந்த BA.2.86 கொரோனா பாதிப்பு கனடாவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரசின் முதல் பாதிப்பை உறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ள கனடா அரசு, பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றும், இந்த வைரஸ் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மக்களுக்கு ஆபத்தானதாக இல்லை” என்றும் தெரிவித்துள்ளது.
BA.2.86 மாறுபாடு முதன்முதலில் கடந்த மாதம் டென்மார்க்கில் கண்டறியப்பட்டது. மேலும் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பதிவாகி உள்ளது.
XBB.1.5 மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது BA.2.86 மாறுபாடு 35-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறி உள்ளனர்.
மேலும் BA.2.86 மாறுபாடு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் தடுப்பு தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களுக்கு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் அதிக திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.