புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நடிகர் விஜய் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய்யும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இரண்டாவது முறையாக கைகோர்த்து இவர்களது கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் லியோ.
பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்து வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையின் முக்கிய இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் படக்குழு லியோ படத்ஜின் 1st சிங்கள் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது . அந்த போஸ்டரில் தளபதி விஜய் வாயில் சிகரெட்டுடன் கெத்தாக உள்ளார் .
இந்நிலையில் எண்ணற்ற ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது மனதிற்கு வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.
புகைப்பிடிக்கும் காட்சியில் அவர் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பு அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.