தமிழ்நாடு தொழில் துறை சார்பில் நடைபெற்று வரும் மருங்கூர் அகழாய்வில் பழங்கால கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசும் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில் துறை மருங்கூரில் முகாமிட்டு நடத்தி வரும் இந்த அகழாய்வில் தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ நீளமும் 8 மி. மீ விட்டமும் 0.45 கிராம் எடையும் கொண்டது.
ஏற்கனவே இந்த அகழாய்வில் பல பலன்களை பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது அகழய்வுச் செய்யப்படும் இந்த இடம் மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளதை மேலும் உறுதிசெய்கின்றது.