அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . மேலும் தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ₹1000ல் இருந்து ₹1500 ஆக உயர்த்தப்பட்டது.
Also Read : டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது..!!
தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ₹150ல் இருந்து ₹225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு ₹450ல் இருந்து ₹670 ஆக உயர்வதாகவும் புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயராது எனவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.