ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜவை பலப்படுத்தும் நோக்கத்தின் முக்கிய பகுதியாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்கிறார்.
என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் . அண்ணாமலையின் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார் .
இந்நிலையில் இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் #EnMannEnMakkal நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு தமிழக பாஜக சொந்தங்களையும், பாரதப் பிரதமர் திரு .நரேந்திர மோடி
அவர்களின் மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்! ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்! #EnMannEnMakkal என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.