திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தமிழ்நாடு பாஜக தலைவர் மோகன்ராஜ் உள்ளபட 4 நான்கு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர் .
வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் குடும்பத்துடன், போதை கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த குற்ற சம்பவத்தை கண்டித்து திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர் .
இந்நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர குற்ற சம்பவத்தில் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .