அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மீண்டும் (raid) அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டிருப்பது தேர்தல் அரசியல் அரங்கில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை என்றெல்லாம் அப்போது விஜயபாஸ்கர் பேட்டி தட்டியிருந்தார்.
இந்த நிலையில் திடீர் நிகழ்வாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறையினரின் சோதனை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்த காரணத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இன்று அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/the-election-commission-allotted-the-cooker-symbol-to-the-ammk/
ஆனாலும் இந்த சோதனை என்பது அதிமுகவினருக்கு கிலி ஏற்படுத்தவே தற்போது மத்திய அரசின் அழுத்தத்தால் நடத்தப்படுவதாக அதிமுக தரப்பில் பார்க்கப்படுகிறது.
எப்படியும் தேர்தலில் தங்களோடு கூட்டணி வைத்துவிடுவார்கள் என்று காத்திருந்த நிலையில், அதிமுக தங்களது முடிவில் உறுதியோடு இருப்பதால் அதிமுகவை சீண்டிப் பார்க்கவும், இந்த ரெய்டு மூலம் அதிமுகவின் (raid) இமேஜை டேமேஜ் செய்து அரசியல் ஆதாயம் பார்க்க பா.ஜ.க தரப்பு காய் நகர்த்துவதாகவும் அதிமுக தரப்பில் இருந்து குமுறல் குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.