சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘அயலான்’ படத்தின் Second Single குறித்த தரமான அப்டேட் ஒன்றை அப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் குடும்ப நாயகன் என்று அன்போடு அழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அயலான் . 2024 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை கொடுத்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது :
‘அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘அயலா அயலா’ என்ற பாடல் வரும் டிசம்பர் 20ஆம் தேதி புதன்கிழமை வெளியாகிறது அனைவரும் கேட்க தயாரா என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது .