தளபதி விஜயின் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான லியோ படம் திரையரங்குகளில் தற்போது தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தின் வெற்றி விழா குறித்த குட்டி அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் லோகேஷ் அவர்களின் மிரட்டலான இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியான நாள் முதல் தற்போது வரை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஒன்றுக்கு இரு முறை படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் .
லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று பின்னர் சில பல காரணங்களால் அது நடக்காமலே போனது.
இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள இப்படத்தின் வெற்றிவிழா குறித்த குட்டி அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.
அதன்படி இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த அதே இடத்தில் தற்போது அப்படத்தின் வெற்றிவிழாவை நடத்த லியோ படக்குழு திட்டமிட்டுள்ளது .மேலும் அதற்கான அனுமதியும் காவல்துறையிடம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் படக்குழுவிடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இந்த வெற்றிவிழாவில் சொன்னபடி நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.