உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது தற்போது காலிறுதி போட்டிகள் முடிவடைந்து அரையறுதி போட்டிகள் தொடங்க உள்ளது கால் இறுதி போட்டியில் அர்ஜென்டினா, குரேஷியா, பிரான்ஸ், மொரோக்கோ ஆகிய அணிகள் தகுதி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன இதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிகள் நேற்று ஆரம்பமானது முதலாவது அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா – குரேஷியா அணிகள் பலபரிட்சை செய்தன.
இரு அணிகளும் முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல உள்ளதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக அமைந்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டினா தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டியது போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது அந்த பெனால்டி வாய்ப்பை அணியின் கேப்டன் மெஸ்ஸி பயன்படுத்தி அணிக்கு முதல் கோலை அடித்தார்.
அதன் பின்னர் 39 ஆவது நிமிடம் அந்த அணி வீரர் அல்வரஸ் அடுத்த கோல் அடித்து குரேஷியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் இதனால் முதல் பாதி 2-0 என்ற கணக்கில் முடிந்தது இரண்டாவது பாதிலியாவது குரேஷியா பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர் ஆனால் இரண்டாவது பாதையிலும் அர்ஜென்டினா தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது போட்டியின் 79வது நிமிடத்தில் அல்வாரஸ் மற்றொரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இதனால் முழு நேர முடிவில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இறுதிவரை போராடிய குரேஷியா அணியினால் ஒரு கோல் கூட எடுக்க முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது வரும் 18ஆம் தேதி இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.
மற்றொரு அரை இறுதி போட்டியில் நாளை பிரான்ஸ் மற்றும் மொரோகோ அணிகள் மோத உள்ளன இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 18ஆம் தேதி அர்ஜென்டினா அணியுடன் இறுதி போட்டியில் மோத உள்ளது.