உலகக்கோப்பை கால் பந்து போட்டியின் இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த போட்டி இறுதிவரை பரபரப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரான்ஸ் அணியின் அதிரடி ஆட்டம் அனைவரையும் இருக்கையின் நுனிக்கே கொண்டுசென்றது. தொடர் கோல் அடித்த மெப்பே அர்ஜென்டினாவை அதிர வைத்தார். ஆனால் இறுதியில் நடந்த பெனால்டி ஷூட் முறையில், அர்ஜென்டீனா தொடர் கோல் அடிக்க, பிரான்ஸ் அணியோ அந்த வாய்ப்பை தவற விட்டது.
இதனால் பெனால்டி ஷூட் விதிமுறைப்படி அர்ஜென்டினா 2022 ஆம் ஆண்டிற்கான கால் பந்து உலககோப்பையாயை கைபற்றி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை தொடர்ந்து உலககோப்பையில் தோல்வியுற்ற பிரான்ஸ் அணி 2 நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் சென்று சேர்ந்தது. அங்கு வந்து இறங்கிய அணி வீரர்களுக்கு பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள், மக்கள் உற்சாக வரவேற்ப்பலித்தனர்.
இவர்களை தொடர்ந்து நேற்று அர்ஜென்டினா சென்று சேர்ந்த அர்ஜென்டினா அணிக்கு அவர்கள் நாட்டு மக்கள், ரசிகர்கள் பெரும் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். வீதி எங்கும் கொண்டாட்டம், வானவேடிக்கை நிகழ, உலககோப்பையை கையில் தூக்கி பிடித்தபடி அணியின் கேப்டன் மெஸ்ஸி விமானத்திலிருந்து இறங்கி வர, ரசிகர்களின் கரக்கோஷம் விண்ணை பிளந்தது.
அணிக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பேருந்தில் அணி வீரர்கள் அமர்ந்துகொண்டு கோப்பையை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் அர்ஜென்டினா வீதிகள், சாலைகள் மக்களால் நிரம்பியது. கோப்பையை கொண்டு செல்லும் பேருந்து நகர முடியாமல் திணறியது. வழி நெடிகிலும் காதிருந்த மக்கள் பாடல் பாடி, இசை கருவிகள் வாசித்து, கரகோஷம் எழுப்பி ஆராவாரம் செய்தனர்.
இந்த கொண்டத்ததில் சுமார் 50 லட்சம் மக்கள் பங்குபெற்றதாக கூறப்படுகிறது. 36 வருடங்களுக்கு பிறகு அர்ஜென்டினா கோப்பையை வென்றதாலும், புகழ் பெற்ற கால் பந்து வீரர் மெஸ்ஸியின் கோப்பை கனவு நினைவானதாலும் அர்ஜென்டினா நாடு விழா கோலம் பூண்டுள்ளது. கூட்டம் கட்டுகடங்காமல் சென்றதால் பாதுகாப்பிற்காக வீரர்கள் அனைவரும் தனி ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.