கேரளாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் விளையாட லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இந்தியா வரவுள்ளதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் அறிவித்துள்ளார்.
எந்த அணியுடன் மோதல் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடைசியாக 2011ல் வெனிசூலா – அர்ஜெண்டினா இடையேயான நட்பு ரீதியான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
Also Read : தஞ்சை ஆசிரியர் கொலை சம்பவத்தின் பின்னணி என்ன..?
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருகை தருவதன் மூலம் வரலாறு படைக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் முயற்சிகள் மற்றும் அர்ஜென்டினாவின் ஆதரவால் இந்த கனவு நனவாகிறது. சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராவோம் என கேரள முதல்வர் -பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.