ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில் தற்போது என்கவுன்டர் அச்சத்தில் பிரபல ரவுடி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
Also Read : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை..!!
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 24க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் சீசிங் ராஜா ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள சீசிங் ராஜாவின் கூட்டாளி ரவுடி விவேக் ராஜா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை வழக்கில் இதுவரை 2 என்கவுண்டர்கள் நடந்துள்ள நிலையில் என்கவுன்டர் அச்சத்தில் விவேக் ராஜா சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.