பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டு 5000க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர்.
Also Read : புயலுக்கு வாய்ப்பில்லை கனமழைக்கு வாய்ப்பு இருக்கு – ட்விஸ்ட் கொடுத்த பிரதீப் ஜான்..!!
நாட்கள் செல்ல செல்ல இந்த கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுவது குறித்து தனியாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறிய நிலையில் தற்போது இதை தனியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.