ஜம்மு காஷ்மீரில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஸ்த்வர் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் இருவரை தீவிரவாதிகள் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், குந்த்வாரா மற்றும் கேஷ்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்தபோது இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி (ஜேசிஓ) நாயப் சுபேதார் ராகேஷ் குமார் வீரமரணம் அடைத்துள்ளதாகவும் . மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .