உத்தரகாண்ட் : சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய இந்திய பொறியாளர்களுக்கு சர்வதேச சுரங்க அமைப்பின் தலைவர், நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களை 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புக்குழு நேற்று இரவு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சர்வதேச சுரங்க அமைப்பின் தலைவர், நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கூறியதாவது:
மீட்பு பணியில் பங்கெடுத்தது கவுரவம்; ஒரு தந்தையாக, தொழிலாளர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்ததில் மகிழ்ச்சி; மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு புரிதல் இருந்தது; நாங்கள் சிறந்த குழுவாக பணியாற்றினோம்.
இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர்; இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி. நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல, சுரங்க விபத்து மீட்புப் பணி உள்பட மற்ற விஷயங்களிலும் சிறந்தவர்களே.
இந்த பணியில் என்னை ஈடுபடுத்திய எங்கள் நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ்-க்கு எனது நன்றிகள் என உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய சுரங்கப் பணி நிபுணர் மற்றும் சர்வதேச சுரங்க அமைப்பின் தலைவர் அர்னால்ட் டிக்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.