சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி காட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தீவிரியமாக இறங்கியுள்ளது
எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.