தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கஸ்தூரியை கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார் .
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை இன்று விசாரித்த நீதிபதி வெங்கடேஷ் தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் போலீசாரின் சம்மனை ஏற்க மறுத்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார் .