இந்தியா – பங்களாதேகஷ் அணிகளுக்கு இடையேயான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகமாக மொமினுல் 84 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் அஷ்வின், உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டும், உணத்கட் 2 விக்கெட்டை கைபற்றினர்.
இதனையடுத்து பேட் செய்த இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை பரி கொடுத்தது. அணியின் முன்னணி வீரர்கள் குறைந்த ரன்னில் வெளியேறினார். ரிசப் பண்ட் – ஷ்ரேயாஸ் ஐயர் அணியை சரிவிலிருந்து காப்பாற்றினர். இறுதியாக இந்தியா அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பங்களாதேஷ் அணியை விட 97 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பங்களாதேஷ் 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்களும், ஜாகிர் 51 ரன்களும் சேர்த்தனர். இதனையடுத்து 145 ரன்கள் இந்திய அணிகக்கு இலக்காக அமைக்கப்பட்டது. இலக்கை தொடர்ந்து பேட் செய்த இந்திய அணிகக்கு ஆரம்பமே அதிரிச்சி அளித்தது.
தொடக்க வீரர்களான ராகுல், பூஜாரா, கோலி, கில் ஆகியோர் விக்கெட்டை பங்களாதேஷ் சீட்டுகட்டு போல சரித்தது. 45 ரன்கள் எடுத்த நிலையில் 3 ஆம் நாள் ஆட்டம் முடிவில் 4 முக்கிய பேட்சமங்களை இழந்து தடுமாறியது இந்தியா. பின்னர் 4 ஆம் நாளான இன்று தொடக்கமே தொடர்ந்து 3 விக்கெட்டை இழந்தது. இதனால் 75 ரன்னுக்கு 7 விக்கெட் சரிந்து தோல்வியின் விழும்பில் தவித்தது இந்தியா.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் – அஷ்வின் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் நிலையை சரி செய்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருவரும் சிறப்பாக பேட் செய்து அணியை வெற்றி பெற செய்தனர். ஒரு கட்டத்தில் டிரா செய்தால் போதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீராபக ஆடி அணியை திரில் வெற்றி அடைய செய்தது இந்த இணை.
இந்த போட்டியில் 6 விக்கெட்டை கைபற்றி முக்கியமான நேரத்தில் 62 பந்தில் 42 ரன்கள் சேர்த்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு போட்டிகள் கொண்ட லிந்த தொடரை இந்திய 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.