கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை( asia cup ) t20 தொடர் இன்று ஆரம்பமாகிறது. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ளது. ஒரு பிரிவில் 3 அணிகள் என இரண்டு பிரிவில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி இடம் பெற்றுள்ள A பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பிரிவில் பங்களாதேஷ், இலங்கை, ஆப்கனிஸ்தான் அணிகள் உள்ளன.
தொடக்க நாளான இன்று B பிரிவில் மொகமத் நபி தலைமையிலான ஆப்கனிஸ்தான் அணி தசூன் ஷணக்கா தலைமையிலான இலங்கை அணியுடன் பலபரீட்ச்சை செய்யவுள்ளது. அனைத்து அணிகளும் மொத்தமாக 2 லீக் போட்டியில் விளையாடவுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்தியா vs பாகிஸ்தான் :
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் உற்று நோக்கப்படும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டி நாளை ஞாயிற்றுகிழமை நடைப்பெறவுள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடுவுள்ளனர். சென்ற ஆண்டு நடைப்பெற்ற t20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதன்முதலாக வெற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. துபாய் மற்றும் சார்ஜா நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசிய கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியே அதிகபட்சமாக 7 முறை கோப்பையை வென்றுள்ளது. அடுத்தபடியாக இலங்கை 5 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி 2 முறை வென்றுள்ளது. ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் இதுவரை கோப்பையை கைபற்றவில்லை.