விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி (Minister I Periyaswamy), உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் அவர்கள் தலைமையில், காணை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி..
மூன்று நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் மிக முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கியமான ஒன்று கிராமப்புற சாலைகள் எல்லாம் மேம்படுத்துவதற்காக ஆண்டுக்கு 10,000 கிலோ மீட்டர் என 4000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு 50,000 கிலோமீட்டர் சாலைகள் போடப்பட உள்ளது.
சாலை போடும் பணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் துவங்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 390 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்ற பணிகள் தொடங்கப்பட உள்ளது. கிராமப்புற சாலைகள் அனைத்தும் தரமான சாலைகளாகவும் பழுதாகிவிட கூடாது என்ற நோக்கத்தில் சிறந்த முறையில் இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
கிராமப்புறங்களில் குடிநீர் மின்சார வசதி குடியிருப்பு வீடுகள் உள்ளிட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். சுத்தம், சுகாதாரம், சாலை கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதி கிராமப்புறங்களில் செய்து கொடுக்கப்படும். விரைந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த திமுக ஆட்சியில், 140 சமத்துவ புறங்கள் 190 கோடியில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், வருகின்ற ஆண்டில் 88 சமத்துவ புறங்கள் 67 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி (Minister I Periyaswamy) விழுப்புரத்தில் பேட்டி அளித்துள்ளார்.