மத்தியப் பிரதேசத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு காவல் உதவி ஆணையர் CPR அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பவம் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
நாடு முழுவத்தும் நவராத்திரி தசாரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
Also Read : விவாதத்திற்குள்ளாகும் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!
இதில் மாநிலத்தின் ஒரு பகுதியில் தசாரா கொண்டாட்டத்தின்போது ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ஆம்பிலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தும் கூட்டநெரிசலில் ஆம்பிலன்ஸ் வர தாமதம் ஆனதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் சுனில் திவாரி மாரடைப்பு ஏற்பட்டு துடித்த நபருக்கு CPR முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பின் அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய காவல் உதவி ஆணையர் சுனில் திவாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.