தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி (athulya ravi) .தமிழில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதுல்யா ரவி இந்த படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு சுட்டுப் பிடிக்க உத்தரவு,அடுத்த சாட்டை,கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த கடாவார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் சாந்தனுடன் இணைந்து முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் அதுல்யா நடித்திருந்தார்.சமீப காலமாக அவர் பதிவிடும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதில் அவர் முகத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் சொல்லி வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் அதுல்யா ரவி பதிவிட்டு இருந்த புகைப்படம் ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்துடன் இணைந்து அதுல்யா ரவியின் பழைய புகைப்படங்களும் டிரெண்ட் ஆகி வருகிறது.
இதுகுறித்து நடிகை அதுல்யா ரவி ஒரு பேட்டியில் பதிலளிக்கும் பொழுது தான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை.அதற்கு தன் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் உடற்பயிற்சி மூலமாகவும் யோகாவின் மூலமாகவும் இப்படி அழகாக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.இந்த பதிலை ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர் உடற்பயிற்சி மூலமாக மூக்கின் வடிவத்தையே மாற்ற முடியுமா..?அப்படியானல் அதை தங்களுக்கும் சொல்லி தரும் படி கமெண்ட் செய்து வருகின்றனர்.