இந்தியா – ஆஸ்ட்ரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டு, ஆஸ்ட்ரேலிய வீரர்கள் இந்தியா வந்தடைந்து பயிற்சியில் இறங்கியுள்ளனர். 4 டெஸ்ட் போட்டிகள், மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் தொடக்கமாக, டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்ட்ரேலியா அணியில் முக்கிய திருப்பமாக, மற்றொரு வேகா பந்து வீச்சாலரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஹசெல்வுட் சென்ற மாதம் தென் ஆப்பிரிக்கா அணிகக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது இடது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் இந்தியாயுடனான தொடரில் அவரது பெயர் இடம்பெற்றது.
தற்போது பயிற்சி ஆட்டத்தில் பந்து வீசி வந்த ஹசெல்வுட், காயம் காரணமாக நிலையாக ஓடவோ,பந்து வீச முடிவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னணி வேக பந்து வீச்சாளர் ஸ்டார்க் காயத்தால் முதல் போட்டியிலிருந்து விலகியது அந்த அணிகக்கு பின்னடைவாக இருந்த வந்தது. தற்போது ஹசெல்வுட் விலகல் அணியை நிலையை சரிவாக்கியுள்ளது.
சமீப காலமாக ஹசெல்வுட் அதிக t20 போட்டிகளில் விளையாடினார் பின்னர் டெஸ்ட் போட்டிகள் என தொடர்ந்து ஓய்வின்றி வெவ்வேறு வடிவிலான போட்டியில் விளையாடுவதும் இவரின் காயத்தின் காரணமாக பேசப்படுகிறது. பல ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியா அணியின் ஆக்ரோஷமான பந்து வீச்சின் தூன்களான ஸ்டார்க், ஹசெல்வுட் இல்லாமல் இந்த தொடரை ஆஸ்ட்ரேலியா எப்படி எதிர்கொள்வதென குழப்பம் அடைந்துள்ளது.