மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று நடந்து முடிந்தது, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா அணி 156 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்தது 157 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியால் 137 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனை தொடர்ந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா மகளிர் அணி வெற்றி பெற்றது.
இந்த வரலாற்று வெற்றியின் மூலம் 6 வது முறையாக ஆஸ்ட்ரேலியா மகளிர் அணி 20 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. இதுவரை நடந்துள்ள 8 உலகக்கோப்பை போட்டிகளில் 6 முறை கோப்பையை வென்று கிரிக்கெட் உலகில் தனது அசத்திய ஆதிக்கத்தை ஆஸ்ட்ரேலியா நிரூபணம் செய்துவருகிறது. தனது சொந்த மண்ணில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியோ உலககோப்பை வரலாற்றிலே தற்போது தான் முதல்முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த கோப்பையை வெல்லுமென எதிர்பார்த்த நிலையில் அவை கலைந்த கணவாகியது.
ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தனது அசுர பலத்தை வெளிக்காட்டுவதில் ஆஸ்ட்ரேலியா ஆடவர் அணிக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது மகளிர் அணி. இந்த கோப்பைக்கு முன்னதாக 2014, 2018, 2020, 2022 (ஒருநாள் கோப்பை), என வரிசையாக 4 உலகக்கோப்பைகளை தன்சவசமாக்கியது.இந்த மாபெரும் பெருமையை தேடி தந்தது மகளிர் அணியின் கேப்டனான மெக் லானிங் தான்.ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் தனது கேப்டன்ஸியில் இதுவரை 4 ஐசிசி கோப்பைகளையே வென்றுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்டான எம்.எஸ்.தோனி இதுவரை 3 ஐசிசி கோப்பைகளையே கைப்பற்றியுள்ளார். இவர்கள் எல்லோர் சாதனையையும் லானிங்ஸ் தகர்த்துள்ளார்.
தொடர்ந்து இவர் தலைமையில் ஆஸ்ட்ரேலியா பெறும் 5 ஐசிசி கோப்பை இதுவாகும். கிரிக்கெட் உலகில் எப்போதும் ஆடவர் அதிகம் பங்கு பெற்று, பெரும் ஜாம்பவான்கள் உருவாகி பல சாதனைகளை படைக்கும் காட்சிகளையே பார்த்து வந்த ரசிகர்களை. தனது சாதனையையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார் லானிங்ஸ்.