பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளாக மிக மோசமாக விளையாடி வந்த ஆஸ்ட்ரேலிய அணி இந்த போட்டியில் இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ளது. முதல் இன்னினங்ஸில் 109 ரன்களுக்கு இந்தியாவை ஆல் அவுட் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் 163 ரன்களுக்கு சுருட்டியது. பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அரை நாள் ஆட்டத்தை கூட தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்ட்ரேலிய சுழலில் வசமாக சிக்கி சரிந்தது.
2 ஆம் நாள் ஆட்ட இறுதியில் வெறும் 75 ரன்களை மட்டுமே இலக்காக அமைத்தது இந்தியா. இந்த எளிய இலக்கை நோக்கி இன்று காலை களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணி வெறும் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலிய அணி தான் மிக மோசமாக விளையாடி 3 யே நாட்களில் போட்டியை முடித்தனர். தற்போது இந்தியாவை அந்த நிலைக்கு தள்ளியுள்ளது ஆஸ்ட்ரேலியாவின் பந்து வீச்சு. 4 போட்டிகள் அடங்கிய இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தற்போது முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையிருந்தது. ஆனால் தற்போது மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வென்றால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது. இல்லையென்றால் இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றால் மட்டுமே இந்தியா இறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியின் வெற்றியால் ஆஸ்ட்ரேலியா நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.