இந்தியா – ஆஸ்ட்ரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியை இந்தியா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. 4 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி 17 ஆம் தேதி டெல்லிடீல் ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய மூன்றே நாட்களில் நிறைவடைந்ததால் மீதமுள்ள 2 நாட்களில் பயிற்சி மேற்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.நாக்பூர் மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், ஆஸ்ட்ரேலியா ரன் குவிக்கவே போராடியது. இந்தியா சுழல் பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா இணை தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை கொடுத்தது. இதனை கருத்தில் கொண்ட ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு நாக்பூர் மைதானத்தில் பயிற்சி செய்ய அந்த மைதானத்தில் அனுமதி கோரியிருந்தனர்.
இருப்பின்னும் போட்டி முடிந்த அன்று மாலையே மைதானத்தில் ஆடும் தளத்தில் தண்ணீர் ஊற்றி சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த செயலால் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கடும் அதிரிச்சி அடைந்தனர். முன்னாள் வீரர் இயன் ஹீலீ இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நிர்வாகம் அனுமதி கோரிக்கை வைத்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டது கண்டிக்கதக்கது என்றார்.
போட்டி முடிந்தவுடன் ஆடுதளத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது கிரிக்கெட்டில் வழக்கமான நடைமுறை தான். ஆனால் மீதம் 2 நாட்கள் இருந்த நிலையில், அதில் பயற்சி எடுக்க அனுமதி கேட்டதும் இப்படி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தண்ணீர் ஊற்றினால் களத்தின் தன்மையும், ஆடும் சூழலும் வேறுப்படும் என்பது தெரியாதா என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க வேண்டுமென்றும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இந்த செயல் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.