20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த போட்டியில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்ட்ரேலியா ஆப்கனிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அரை இறுதி செல்லும்.
அடிலைட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கனிஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்ட்ரேலிய அணியின் தொடக்க வீரர் பின்ச் காயம் காரணமாக இடம் பெறவில்லை, இதற்கு பதில் விக்கெட் கீப்பர் வேட் கேப்டனாக நியமிக்கபட்டார். தொடக்க வீரர் கிரீன் வேகமாக 25 ரன்கள் எடுத்து அவுட் ஆக வார்னர் வந்த வேகத்தில் 2 ரன்கள் மட்டும் சேர்த்து வெளியேறினார்.
பின்னர் வந்த மார்ஷ் அணியின் ஸ்கோரை தனது அதிரடி ஆட்டத்தால் உயர்த்தினார். இவரோடு ஸ்டொயினிஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் செய்தார். 53 ரன்கள் குவித்த இந்த இணையில் மார்ஷ் 43 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அணியின் நிலையை தனது அதிரடி ஆட்டத்தால் மாற்றினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்தில் 54 ரன்கள் குவிக்க அந்த அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் குவித்தது. ஆப்கனிஸ்தான் வீரர் நவீன் 3 விக்கெட்டை கைபற்றினார். இதனையடுத்து ஆப்கனிஸ்தான் அணி இலக்கை நோக்கி பேட் செய்தது, உஸ்மான் 2 ரன்னில் வெளியேறினார். குர்பாஸ் மட்டும் 30 ரன்கள் குவித்து ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த நயிப் மட்டும் 39 ரன்கள் குவித்தார், இறுதியில் ரஷீத் கான் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சை ஆட்டித்து துவைத்தார். இதானல் ஸ்கோர் வேகமாக ஏறியது, இறுதி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 17 ரன்கள் மட்டும் சேர்த்து வெறும் 4 ரன்னில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியால் ஆஸ்ட்ரேலிய அணி புள்ளி பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது, இங்கிலாந்து அணியின் வெற்றி தோல்வி பொறுத்து தான் ஆஸ்ட்ரேலியா அரை செல்வது உறுதியாகும். ஏற்கனவே நியூசிலாந்து அணி ஆஸ்ட்ரேலிய அணியை விட அதிக ரன் ரேட் வைத்துள்ளதால், இங்கிலாந்து தோல்வியடைந்தால் மட்டுமே ஆஸ்ட்ரேலியாவின் வாய்ப்பு திடமாகும்.