சென்னையில் மக்கள் கூட்டம் நிறைந்த சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 5 ஆட்டோ ஓட்டுனர்கள் ( Auto race in Chennai ) உட்பட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சென்னையில் உள்ள முக்கிய சாலையில் அதிகாலை நேரத்தில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் குன்றத்தூரை சேர்ந்த மணி, அம்பத்தூர் சேர்ந்த ஷாம்சுந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
Also Read : மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது என்று சொல்லவது தவறு – ஹெச்.ராஜா பேட்டி
தகவல் அறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆட்டோ ரேஸ் நடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தனர் .
இதுகுறித்த செல்போன் வீடியோ காட்சிகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 5ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
கைதான 7 பேர் மீதும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், ( Auto race in Chennai ) அபாயகரமாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .