அயோத்தியில் ராமர் (Ayodhya ram) கோயில் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில் முகேஷ் அம்பானி, ரஜினிகாந்த், விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் (Ayodhya ram) கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலித்து திருவிழா கோலம் பூண்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாளான இன்று நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை
பகல் 12.20 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இதன் பின்னர் பிரதமர் மோடி 7,000 பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 2.10 மணி அளவில் ராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள சிவன் கோயிலில் பிரதமர் வழிபடுகிறார்.
https://x.com/ITamilTVNews/status/1748914961521483856?s=20
மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவப்படுகிறது.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வருகை தரும் பிரபலங்கள்
இதில் பங்கேற்பதற்காக தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, என். சந்திரசேகரன், அனில் அகர்வால், நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் அயோத்தி வந்துள்ளனர்.
இதையும் படிங்க : Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள்
இதேபோன்று சச்சின், விராட் கோலி, ஆகியோரும் விழாவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைத்துறையில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மோகன் லால், சிரஞ்சீவி, அக்சய் குமார், தனுஷ், ரன்பிர் கபூர், ரிஷப் ஷெட்டி, அஜய் தேவ்கன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.