சிவகாசியில் இருந்து அயோத்திக்கு (Ayodhya) பட்டாசு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், பா.ஜ.க ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட ராமர் கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது.
அயோத்தியில் (Ayodhya) ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் ‘கருடா’ போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவிலின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், இதன் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1747893128332529941?s=20
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி 11 நாள் விரதம் இருந்து நாடு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
அயோத்தி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் கோவிலுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றிக் கொண்டு அயோத்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கார்கி கேடா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது லாரியில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் 3 மணி நேரமாக வெடித்து சிதறின.
தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/sivagangai-siravayal-jallikattu-tn-govt-announces-rs-3-lakhs-solatium/
சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்வசமாக யாரும் காயமடையவில்லை.