பெங்களூரு – ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு (bangalore blast) சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை NIA அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட்டான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது.
இந்த விபத்தில் அந்த உணவகத்தில் இருந்த பலர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அங்குள்ள cctv காட்சிங்களை சோதனை செய்தபோது அங்கு நிகழ்ந்தது குண்டு விடுப்பு என தெள்ள தெளிவாக தெரிந்தது.
இதையடுத்து இந்த வழக்கு வேற திசைக்கு மாற குண்டுவெடிப்பு என்ன காரணம் யார் இதை செய்தது என்பதை அம்மாநில போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்புக்கு பின்னல் isis தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் (NIA) இந்த குண்டுவெடுப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு (bangalore blast) வந்த சந்தேக நபரை NIA அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். ஷபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் பெல்லாரியில் இன்று கைது செய்யுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.